ஹோம் /நியூஸ் /இந்தியா /

செயற்கை முறையில் கருவுற்ற வேட்டை நாய்.. புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் முதல் முயற்சி

செயற்கை முறையில் கருவுற்ற வேட்டை நாய்.. புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் முதல் முயற்சி

நாய்

நாய்

Puducherry : புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் செயற்கை முறையில்  கருவுற்ற முதோல் வேட்டைநாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குட்டி நாய் ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தை சார்ந்த முதோல் (Mudhol) வேட்டை நாய்கள் கென்னல் கிளப் ஆப் இந்தியாவால் அங்ககீகரிக்கப்பட்டது. இந்த இனம் வேட்டை நாயாக கருதப்பட்டாலும் இப்பொழுது துணை நாயாகவும் காவல் நாயாகவும் வளர்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண் மற்றொன்று பெண் இனத்தை சேர்ந்த முதோல் வேட்டை நாய்க்குட்டி வாங்கப்பட்டு அறிவியல் ரீதியாக பராமரிக்கப்பட்டு வளர்ந்து வருகிறது. பருவமடைந்து மற்றும் பாலுறவு முதிர்ச்சியடைந்த பிறகு இனப்பெருக்கக் காலத்தில் இரண்டும் உடல் இனச்சேர்க்கை நெருக்கத்திற்கு ஒன்றாக சேரவில்லை.

இது குறித்து புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை  துறையில் ஆண் நாய்க்கு செயற்கை முறை விந்து சேகரிப்பு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பின் விந்து சேகரித்து ஆராயப்பட்டது. சேகரிக்கப்பட்ட விந்து உயிர் அணுக்களின் முற்போக்கான விந்தணு இயக்கம் 80% சதவிகிதம், விந்தணு செறிவு 170 மில்லியன் / மி.லி, விந்தணுக்களின் உயிர் எண்ணிக்கை 87 சதவிகிதம் மற்றும் விந்தணு உருவவியல் குறைபாடுகள் 7 சதவீதம் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இவை அனைத்து மதிப்புகளும் இந்த இனத்தை சார்ந்த ஆண் நாய்களின் விந்தின் வரம்பிற்குள் உள்ளது. பெண் நாய்க்கு இனப்பெருக்கக் காலத்தில் கருஊத்தில் கருமுட்டை வெளிவரும் நேரத்தை கணித்து செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. அதன்பின் அதிர்வெண் ஒலிமூலம் நுட்பமாக ஆராய்ந்து ஒற்றை கருவுடன் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யப்பட்டது.

தாயும் சேயும்

சினைப் பருவக்காலம் முழுவதும் அதிர்வெண் ஒலிமூலம் கருவின் இதய துடிப்பு, அசைவு, ஆரோக்கியத்தை கண்டறியப்பட்டது. சினை பருவகாலம் முடிந்ததும் கருவறையின் வாய் திறவாமல் குட்டி ஈனும் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாமல் இருந்தமையால் மீண்டும் அதிர்வெண் ஒலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் நாய்க்குட்டி இதய துடிப்பும், அசைவும் வெகுவாக குறைந்ததினால் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் 400 கிராம் எடைகொண்ட பெண் நாய்க்குட்டி ஒன்று எடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும்-சேயும் நன்கு குணமடைந்து நலமாக இருக்கின்றன. அந்த குட்டி ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது. இந்த இன அபிவிருத்தி முயற்சியை கால்நடை துறை செயற்கை முறை கருவூட்டல் நிபுணர்கள் மருத்துவர்கள் ஷாலினி, காந்தராஜ்  இணைந்து பல யுத்தியை பயன்படுத்தி சினையாகாமல் இருந்த முதோல் வேட்டை நாயை வெற்றிகரமாக இன அபிவிருத்தி செய்துள்ளனர். இதில், கார்மல் பிரின்ஸ் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் மிக ஆர்வத்துடன் எல்லா நிலைகளிலும் ஈடுபட்டனர்.

Must Read : இறைவனுக்கு நன்றி! நயன்தாராவை கரம்பிடித்த விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு..

இந்நிலையில், இன அபிவிருத்தி மேம்பாட்டு யுத்திக்கான வசதிகளை செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்தி, பயன்பெறலாம் என்று கல்லூரி ஈனியல் துறை தலைவர் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் செஜியன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். செயற்கை முறையில் நாய் கருவூற்றல் என்பது புதுச்சேரி அரசின்  கால்நடை மருத்துவக்கல்லூரியில் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dog, Puducherry