முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370 சட்ட சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை... குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370 சட்ட சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை... குலாம் நபி ஆசாத்

பேரணியில் குலாம் நபி ஆசாத் பேச்சு

பேரணியில் குலாம் நபி ஆசாத் பேச்சு

ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370ஐ எந்த கட்சியாலும் திரும்ப கொண்டுவர முடியாது என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்,  காஷ்மீரில் தொடர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவாளர்களிடம் உரையாற்றி வருகிறார். வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டி முதல் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினர். அந்த கூட்டத்தில் சட்டப் பிரிவு 370 நீக்கம் குறித்து முக்கிய கருத்தை தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு,  இரு  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  இதை எதிர்த்து அங்கு பாஜகவைத் தவிர மற்ற முன்னணி கட்சியினர் குப்கர் கூட்டணி என அமைத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் திரும்ப பெறுவோம் என்ற நோக்கில் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக பேசி வந்த குலாம் நபி ஆசாத் தற்போது அதை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் பேசிய அவர், "நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. வாக்குக்காகவோ, அரசியலுக்காகவோ நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. எனவே, முடியாத விஷயத்தை பற்றி நாம் விவாதிக்க விரும்பவில்லை. 370 சட்டப் பிரிவை மீண்டும் திரும்பப் பெற முடியாது. அது முடிந்து போன கதை. எனவே எந்த அரசியல் கட்சியாலும் அதை திரும்ப பெற முடியாது" என்றார்.

மேலும் குலாம் நபி ஆசாத் பேசுகையில், காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவை தேர்தலில் சுமார் 50 இடங்கள் தான் பெற்றது, கட்சி போகிற போக்கை பார்த்தால் அடுத்து வெறும் 25 இடங்களை மட்டுமே பெறும் என நினைக்கிறேன் என்றார். புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை குலாம் நபி ஆசாத் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க.. ராகுல் காந்தியை வெட்கப்பட வைத்த பெண்கள்

top videos

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் அப்பகுதியின் மிக மூத்த தலைவர் ஒருவரும் 370 சட்டப் பிரிவு குறித்து இந்த நிலைப்பாட்டுடன் பேசுவது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையம் அங்கு தொகுதி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் அங்கு தேர்தல் நடத்தும் முயற்சியை மத்திய அரசுடன் இணைந்து செய்து வருகிறது.

    First published:

    Tags: Article 370, Jammu and Kashmir