விவசாயத் தலைவர் திகைத்துக்கு மட்டும்தான் கண்ணீர் வருமா மோடிக்கு வராதா: சசி தரூர் கிண்டல்

விவசாயத் தலைவர் திகைத்துக்கு மட்டும்தான் கண்ணீர் வருமா மோடிக்கு வராதா: சசி தரூர் கிண்டல்

மோடி.

முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரியின் "By Many a Happy Accident: Recollections of a Life", என்ற நூலின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்ட சசி தரூர், குலாம் நபி ஆசாத் பிரிவுபசார விழாவில் பிரதமர் மோடியின் பேச்சை ‘கலைத்திறனுடன் கூடிய நிகழ்த்துதல்’ என்று நடிப்பு என்பதாக சூசகமாக சாடினார்.

 • Last Updated :
 • Share this:
  ‘உண்மையான நண்பர்’ குலாம் நபி ஆசாத்தை ஓய்வு பெற விட மாட்டோம், அவரிடம் தொடர்ந்து ஆலோசனைகளைக் கேட்போம், கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்காகவும் சிந்தித்தவர் என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பிரிவுபசார விழாவில் கண்ணீர் மல்க பேசினார்.

  இதற்கு பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன. காங்கிரஸ் தலைவர் சசிதரூர் பிரதமரின் கண்ணீரையும் பேச்சையும், “கலைத்திறனுடன் கூடிய நிகழ்த்துதல்” என்று நடிப்பு என்பது போல் சூசகமாக ஒரு உயரிய மொழியில் தெரிவித்து கிண்டல் செய்தார்.

  முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரியின் "By Many a Happy Accident: Recollections of a Life", என்ற நூலின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்ட சசி தரூர், குலாம் நபி ஆசாத் பிரிவுபசார விழாவில் பிரதமர் மோடியின் பேச்சை ‘கலைத்திறனுடன் கூடிய நிகழ்த்துதல்’ என்று நடிப்பு என்பதாக சூசகமாக சாடினார்.

  “பாரத் கிசான் யூனியன் அல்லது இந்திய விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் விட்ட கண்ணீருக்கு பதிலாக மோடி தனக்கும் கண்ணீர் இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்” என்று சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.

  குலாம் நபி ஆசாத் பிரிவுபசார விழாவில் மோடி பேசும்போது, “குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர்.

  அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. இவர் அவையை விட்டு போனாலும் அவரது அறிவுரகைள் , கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன்.

  அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம்.

  மேலும் " ஆசாத் சல்யூட் " என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.

  மோடி பேசும் போது, ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை குஜராத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது குலாம் நபி ஆசாத் தனனி அழைத்து ஆசாத் விஷயத்தைச் சொன்னார் என்றும். அந்தச் சம்பவத்தில் பலியானோர் உடல்களை எடுத்து செல்வதற்காக தனக்கு இருமுறை ஆசாத் அழைத்ததையும் கண்கலங்க மோடி குறிப்பிட்டார்.

  ஒவ்வொருவரையும் குலாம் நபி ஆசாத் தன் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் கவனித்துக் கொள்வார் என்றார் மோடி.

  இந்தப் பேச்சைத்தான் சசி தரூர் “பிரமாதமான நிகழ்த்துக் கலை” என்று கிண்டல் செய்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: