முகப்பு /செய்தி /இந்தியா / சாதி மாறி காதல் திருமணம் - மகளை ஆணவக் கொலை செய்து குழந்தையை தூக்கிச் சென்ற பெற்றோர்

சாதி மாறி காதல் திருமணம் - மகளை ஆணவக் கொலை செய்து குழந்தையை தூக்கிச் சென்ற பெற்றோர்

ஹேமாவதி

ஹேமாவதி

குழந்தை பெற்று ஒரு வாரமே ஆனதால் மிகவும் பலவீனமாக இருந்த ஹேமாவதி தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

  • 1-MIN READ
  • Last Updated :

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரை  திருமணம் செய்து கொண்டதால் மகளையே பெற்றோர் அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உசிரிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்த ஹேமாவதி, அதே பகுதியைச் சேர்ந்த கேசவலு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கேசவலு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு ஹேமாவதியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை, ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஹேமாவதி, கேசவலுவை திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோருக்கு பயந்து கணவருடன் வெளியூரில் வசித்து வந்த ஹேமாவதி, அண்மையில் உசிரிபெண்ட்ட கிராமத்தில் குடியேறியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஹேமாவதியை பலமனேர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார் கேசவலு. அவருக்கு ஒரு வாரம் முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று தனது குழந்தை மற்றும் கணவருடன் ஹேமாவதி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்த ஹேமாவதியின் பெற்றோர் அவரை தங்களோடு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் வர மறுக்கேவே ஹேமாவதியை கடுமையாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கேசவலுவையும் தாக்கியுள்ளனர்.

குழந்தை பெற்று ஒரு வாரமே ஆனதால் மிகவும் பலவீனமாக இருந்த ஹேமாவதி தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெற்ற மகளென்றும் பாராமல் சடலத்தை அருகில் உள்ள ஓடையில் வீசிவிட்டு குழந்தையுடன் தப்பிச்சென்றனர் ஹேமாவதியின் பெற்றோர்.

தகவலறிந்து ஆத்திரமடைந்த கேசவலுவின் உறவினர்கள் ஹேமாவதியின் வீட்டிற்குச் சென்று வீட்டை அடித்து நொறுக்கியதுடன், வீட்டை தீவைத்தும் கொளுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பலமனேர் போலீசார் ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Also see...

First published:

Tags: Honor killing