சமூக வலைத்தளமான ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் கோலியை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி #ArrestKohli என்ற ஹேஷ்டேக் ட்ரென்டாகியது அதிர்ச்சியை கிளப்பியது. இதற்கு காரணம் என்வென்று பார்த்த போது தான் தமிழ்நாட்டில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தான் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இந்த ஹெஷ்டேக் ட்ரென்டானது தெரியவந்ததுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். ஐடிஐ படித்துள்ள விக்னேஷ் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு நண்பரான பிரபாகரன் போன் செய்து அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஊருக்கு வெளியில் விக்னேஷ் தலையில் காயம்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த தகவல் காட்டுத்தீப்போல பரவ அக்கம்பக்கத்து கிராமத்தினர் அங்கு குவிந்தனர். அவரது பின் தலையில் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தது. விசாரணையில், பிரபாகரன், விக்னேஷ், இவர்களின் நண்பர்களான தர்மராஜ் மூவர் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளனர். 3 பேரும் மது அருந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தர்மராஜ் மீண்டும் விக்னேஷை அழைத்துக்கொண்டு மது அருந்த சென்றது தெரியவந்தது.
Everyone is quite just bcoz he was fan of Rohit Sharma
We Want Justice Modi Ji 💔#ArrestKohli pic.twitter.com/seGvRlQka7
— Harshit 🐬 (@its_monk45) October 14, 2022
அப்போது விக்னேஷ் மற்றும் தர்மராஜ் இடையே கிரிக்கெட் தொடர்பாக பேச்சு வந்து அது பெரும் சண்டையாக உருவெடுத்துள்ளது. விக்னேஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்யும் ரோஹித் சர்மா ரசிகர். தர்மராஜ் ஆர்சிபி அணிக்கு சப்போர்ட் செய்யும் விராட் கோலி ரசிகர். மதுபோதையில் விக்னேஷ் தர்மராஜை கிண்டல் செய்ததோடு, விராட் கோலியையும் கிண்டல் செய்து தர்மராஜை கடுப்பேற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச படம் எடுத்து 18 எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் : ரூ.30 கோடிவரை மோசடி செய்த ஒடிசா அழகி கைது!
இந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செய்தி வெளியாகி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், ட்விட்டரில் கோலி ரசிகரின் செயலை கண்டித்தும், ரோஹித் சர்மா ரசிகருக்கு நீதி கேட்டும் #ArrestKohli என்ற ஹெஷ்டேகை ட்ரென்ட் செய்து வருகின்றனர். அரியலூரில் மதுபோதையில் இரு இளைஞர்கள் மோதிக்கொண்டு நடந்த கொலைக்கு விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்பது நியாயமா என்று நெட்டிசன்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murder, Murder case, Rohit sharma, Virat Kohli