துணிவு இருந்தால் என்னை கைது செய்யுங்கள்! மம்தாவிற்கு சவால் விட்ட அமித்ஷா

பேரணிக்கு மாநில போலீசார் தடை விதித்ததுடன், அமித்ஷாவின் ஹெலிகாப்டர் இறங்கவும் அனுமதி மறுத்தனர்.

துணிவு இருந்தால் என்னை கைது செய்யுங்கள்! மம்தாவிற்கு சவால் விட்ட அமித்ஷா
மம்தா பானர்ஜி - அமித்ஷா
  • News18
  • Last Updated: May 14, 2019, 6:55 AM IST
  • Share this:
மேற்குவங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கும் தன்னை, துணிச்சல் இருந்தால் கைது செய்து பாருங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு, பாஜக தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா, 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருந்தார்.

இதன் ஒருபகுதியாக, ஜாதவ்பூரில் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த பேரணிக்கு மாநில போலீசார் தடை விதித்ததுடன், அமித்ஷாவின் ஹெலிகாப்டர் இறங்கவும் அனுமதி மறுத்தனர். இருந்தபோதும், ஜாய்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது, மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவை கடுமையாக சாடினர்.


மேலும், மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதியில் தான் பரப்புரை மேற்கொண்டால், அவர் தோற்றுவிடுவார் என்ற அச்சத்தில் போலீசார் மூலம் தடுப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன், 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்பவர்களை கைது செய்வது கண்டனத்துக்கு உரியது என்று கூறிய அமித்ஷா, இந்த மேடையில் தான் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்குகிறேன் என்றார். துணிச்சல் இருந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

Also Watch

First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading