Home /News /national /

Assam Floods: கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம் - 2 லட்சம் பேர் பாதிப்பு, 7 பேர் பலி

Assam Floods: கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம் - 2 லட்சம் பேர் பாதிப்பு, 7 பேர் பலி

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்

Assam floods - அசாம் மழை வெள்ளத்தால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,145 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் மாயமாகியுள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அசாம் மாநிலத்தில் 545.66 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை பாதிப்பு காரணமாக அசாமின் 24 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன.

    அசாம் மழை வெள்ளத்தால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,145 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள கோப்ளி நதி வெள்ள அபாய அளவை தாண்டிய நிலையில், தற்போது பிரம்மபுத்ரா நதியும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 33 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவத்துடன் தேசிய பேரிர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்த வெள்ளத்தால் திமா ஹசாவோ மாவட்டம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகள், ரயில் தடங்கள் முற்றாக சேதமடைந்து போக்குவரத்துக்கு வழியின்றி முடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ரயில் சேவை முடங்கியுள்ள நிலையில், நடு வழியில் சிக்கிய ரயில் பயணிகள் 1600 பேர் ராணுவத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



    ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதவி செய்தவர்களுக்கு ரிபண்ட் தொகையாக இதுவரை ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: The Kashmir files: காஷ்மீரில் பண்டித் கொலை.. வன்முறை: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காரணம் என குற்றச்சாட்டு

    கடந்த சில ஆண்டுகளாகவே அசாமில் ஆண்டுதோறும் மழை வெள்ள பாதிப்பு மாபெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது. இந்தாண்டும் மே மாதமே அசாம் முதல் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் வரும் என்பதால் இது போன்ற பாதிப்புகள் தொடருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அசாமைப் போலவே அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் கன மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த அசாமிற்கு முதல் கட்டமாக ரூ.125 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam, Flood alert

    அடுத்த செய்தி