சொந்த ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்...!

அனைவரையும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உணவு வழங்கி தங்க வைப்பதற்காக ஒரே பேருந்தில் ஏற்றி சென்றனர்.

சொந்த ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்...!
கேரளாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்
  • Share this:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பணிக்காக சென்று அங்கேயே சிக்கி கொண்ட 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டட வேலைக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கண்ணூர் மாவட்டத்தில் சிக்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவித்துவரும் சூழலில், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.

தங்களது குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தமிழகத்தில் உள்ளதால், தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், அவர்களை தமிழகத்திற்கு அனுப்ப மறுத்த மாவட்ட நிர்வாகம், அனைவரையும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உணவுவழங்கி தங்க வைப்பதற்காக ஒரே பேருந்தில் ஏற்றி சென்றனர்.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்