அக்னிபத் திட்டத்தின் கீழ் 3,000 வீரர்களை இந்திய கடற்படையில் சேர்த்துள்ளதாக கடற்படை தளபதி இன்று தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு ஜுன் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும்.
இந்நிலையில், இந்திய கடற்படையின் தலைமை தளபதி, ஆர் ஹரிகுமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.நாளை கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சில முக்கிய தகவல்களை அவர் கூறினார். தளபதி ஆர் ஹரிகுமார் தனது பேட்டியில் கூறியதாவது, அக்னிபத் திட்டத்தின் கீழ் 3,000 அக்னி வீரர்களை இந்திய கடற்படை பணிக்கு சேர்த்துள்ளது.
இதில் 341 பேர் பெண்கள். முதல் முறையாக இந்திய கடற்படையில் பெண்கள் மாலுமிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்சார்பு இந்திய திட்டம் குறித்து அரசு எங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை தற்சார்பு தன்மையை பெறும் என உறுதி தருகிறேன். கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராத்தை சேர்த்து மாபெரும் சாதனையாகும். மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள், கடற்படை கப்பல்களின் இயக்கங்களை இந்திய கடற்படை கூர்ந்து கவனித்து வருகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: ரயில் பாதையில் மாடு மீது மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க ரூ.264 கோடியில் புதிய திட்டம்
மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டுவந்த போது பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திட்டத்தை கைவிட முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறி நாடு முழுவதும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3,000 பேர் பணியர்த்தப்பட்டதாக இந்திய கடற்படை தளபதி தற்போது தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, Indian Navy