இந்திய விமானப்படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்!

Surgical Strike 2.0 | பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்!
இந்திய போர் விமானங்கள் ஊடுருவுகையில் அதனை தடுக்க வந்த பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம், பின்னர் இந்திய போர் விமானங்களின் பலத்தை பார்த்து பின் வாங்கியதாக இந்த ஆஃபரேஷனை திட்டமிட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • News18
  • Last Updated: February 26, 2019, 10:32 AM IST
  • Share this:
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று காலை நுழைந்து இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்ற நிலை நீடித்தே வந்தது.


இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

Also See..
First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading