முகப்பு /செய்தி /இந்தியா / “பெண் கிடைக்கவில்லை”... திருமணமாகாத சோகத்தில் 200 கி.மீ பாதயாத்திரை செல்லும் 90ஸ் கிட்ஸ்..!

“பெண் கிடைக்கவில்லை”... திருமணமாகாத சோகத்தில் 200 கி.மீ பாதயாத்திரை செல்லும் 90ஸ் கிட்ஸ்..!

மாதிரி படம்

மாதிரி படம்

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் தவிக்கும் இளைஞர்கள் 200 கி.மீ பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

பொதுவாக பழனி, திருப்பதி, திருத்தணி போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை போவதை நாம் பார்த்திருப்போம். அரசியல் தலைவர்கள் தேர்தல் காலத்திற்கு முன்பாக மாநிலம், நாடு தழுவிய பாதயாத்திரை செய்வதையும் பாத்திருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் வினோத காரணத்திற்காக பாதயாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம், இந்த பாதயாத்திரையில் பங்கேற்கபவர்களில் பெரும்பாலானோர் 90ஸ் கிட்ஸ் தான். 30 வயதை கடந்தும் தங்களுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் தவிக்கும் இளைஞர்கள் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர். அம்மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் வேளாண் தொழில்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த காலங்களில் இந்த பகுதியில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் பாதிப்பானது இன்றைய இளைஞர்களின் தலையில் தான் விடிந்துள்ளது.

அங்கு ஆண்களை ஒப்பிடும் போது இளம் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், 30 வயதை தாண்டியும் பலருக்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். வயது கடந்தும் சிங்கில்ஸாக தவித்து வரும் இந்த ஆண்களுக்கு ஊக்கம் தரும் விதமாக பிரம்மச்சாரிகளின் பாதயாத்திரை என்ற பெயரில் நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரையில் 30 வயதை கடந்த திருமணமாக இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். சுமார் 105 கி.மீ தூரம் யாத்திரை எம்.எம் ஹில்ஸ் சாமுண்டீஸ்வரி கோயிலில் நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

இன்னும் 100 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எனவே, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சிவமோகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இளைஞர்கள் இந்த பாதயாத்திரையில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். திருமணம் நடைபெறாமல் தவிக்கும் இளைஞர்களின் மன உளைச்சலை போக்கவே இந்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Karnataka, Marriage