தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்! ராணுவ எச்சரிக்கை

தீவிரவாதிகளை முடக்குவதற்கும் அவர்களுடைய செயல்பாடுகளைத் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

news18
Updated: September 9, 2019, 6:40 PM IST
தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்! ராணுவ எச்சரிக்கை
எஸ்.கே.சைனி
news18
Updated: September 9, 2019, 6:40 PM IST
தென்னிந்திய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தென்னிந்தியாவுக்கான லெப்டினட் ஜென்ரல் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லக்ஷர் -இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று ராணுவம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தென்னிய ராணுவத்துக்கான லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.கே.சைனி, ‘தென்னிந்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. சர் கிரிக் கடற்பகுதியில் ஆளில்லாத சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீவிரவாதிகளை முடக்குவதற்கும் அவர்களுடைய செயல்பாடுகளைத் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.


அவருடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கேரள மாநில காவல்துறைத் தலைவர், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see:

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...