அருணாச்சல் பிரதேசத்தில் கடும் பனியில் சிக்கிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை ராணுவ வீரர்கள் நள்ளிரவில் மீட்டனர்.
அருணாச்சல் பிரதேசத்தின் புறநகர் பகுதியில் ஜீரோ வெப்பநிலைகளில் சிக்கிக் கொண்டிருந்த 111 பொதுமக்கள் மற்றும் 70 வாகனங்கள் இந்திய ராணுவ வீரர்களால் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டது.
ஏறத்தாழ 14000 அடி உயரத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மீட்பதற்காக இந்திய இராணுவம் பிப்ரவரி 29 அன்று அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்தது.
இந்திய இராணுவத்தின் இரண்டு அணிகள் தங்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் மீட்பு வாகனங்களுடன் இரவு முழுவதும் இடைவிடாமல் வேலை செய்து பனியில் சிக்கித் தவித்தவர்களை மீட்டெடுத்தனர்.
அருணாச்சல பிரதேசத்தின் சேலா பாஸில் பூஜ்ஜிய வெப்பநிலையில் கடும் பனியில் சிக்கித் தவித்த 70 வாகனங்களில் இருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட 111 பொதுமக்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவ வீரர்கள் பிப்ரவரி 29-ம் தேதி நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடும் பனிகளில் சிக்கிக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் அவர்களுக்கு அந்த இடத்தில் சூடான தேநீர், தின்பண்டங்கள் மற்றும் உணவை வழங்கினர்.
மேலும் சிக்கித்தவித்த அவர்களை சிறப்பாக மீட்டெடுத்த இந்திய ராணுவத்தினருக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்தனர். அவர்கள் செய்த உதவியை கடவுள் உதவி என்று அழைத்தனர்.
மேலும் நிலைமையைக் கண்காணித்து வந்த அந்த மாநில முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் இந்திய இராணுவத்தினரின் சரியான நேரத்தில் செய்த உதவியை பாராட்டினார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.