ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரின் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ உயரதிகாரி உட்பட 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரியும் 4 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சூரன்கோட் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடந்தது என்று கூறியுள்ளார்.

சமீப நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக போர் நிறுத்த மீறல் பிரச்சினை புத்துயிர் பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

First published:

Tags: Indian army, Jammu and Kashmir