ஹோம் /நியூஸ் /இந்தியா /

அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை

அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை

ராணுவத்தினர் - கோப்புப் படம்

ராணுவத்தினர் - கோப்புப் படம்

அசாமின் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் தலைவருமான ஜகதீஷ் பூயன் அளித்த புகாரின் பேரிதான் அவர்களை ராணுவத்தினர் கைது செய்ததாக கூறப்பட்டது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  அசாம் மாநிலம் தாங்காரி என்ற இடத்தில் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். அதன்பின்னர் இவர்களை ராணுவத்தினர் சிலர், பிடித்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகின. தேயிலை தோட்டத்தின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில்  அசாமின் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் தலைவருமான ஜகதீஷ் பூயன் அளித்த புகாரின் பேரில்தான் அவர்களை ராணுவத்தினர் கைது செய்ததாக கூறப்பட்டது.

  ஆனால் ராணுவத்தினர் அந்த இளைஞர்களை உல்பா தீவிரவாதிகள் என்று  நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காகவே இந்த போலி என்கவுண்டரை நடத்தியதாக அசாம் கனபரிஷத் கட்சி வழக்கு தொடர்ந்து போராடி வந்தது. இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நேற்று விசாரணக்கு வந்தது.

  இந்த வழக்கில் மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ, ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங் மற்றும் ஜெகதியோ சிங் மற்றும் நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

  ALSO WATCH...

  நம்பிக்கை நாயகன் அப்துல்கலாம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Army, Assam, BJP, Fake Encounter, Jagadish Bhuyan, Major General, Sentenced to life