• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”இனிமேல் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும்”... ஓடிடி வெப் சீரிஸ், திரைப்பட குழுக்களை வலியுறுத்தும் பாதுகாப்பு அமைச்சகம்..

”இனிமேல் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும்”... ஓடிடி வெப் சீரிஸ், திரைப்பட குழுக்களை வலியுறுத்தும் பாதுகாப்பு அமைச்சகம்..

தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்

தயாரிப்புக் குழு, தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

  • Share this:
    ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரியல்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி இவற்றை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வெப்சீரிஸுக்கு ராணுவத்திடம் அனுமதிக் கடிதம் வாங்க வலியுறுத்தும் விண்ணப்பம்.


    xxx uncensored (season 2) என்னும் இந்திய வெப் சீரிஸில் இந்திய ராணுவ வீரரையும், அவரது சீருடையையும் அவமதி்க்கும் விதத்திலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு பிறகு, இத்தகைய விண்ணப்பம் தணிக்கை வாரியத்திடம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: