Home /News /national /

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 14 பேரில் உயிர் பிழைத்த ஒரேயொரு அதிகாரி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 14 பேரில் உயிர் பிழைத்த ஒரேயொரு அதிகாரி

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது.

  • Last Updated :
    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் தலைமை தளபதி உள்பட13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் உயிர் பிழைத்த ஒரே ஒரு விமானப்படை அதிகாரி மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நண்பகல் 12.20 மணி அளவில் குன்னூர் அருகே, காட்டேரி என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரமாக ஹெலிகாப்டர் பற்றி எரிந்துகொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர், மீட்பு படையினர், கோவை மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தனர்.

    விபத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Also Read : Bipin Rawat: முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு



    ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். படுகாயமடைந்த அவர், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

    அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் விபத்திற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Also Read : விபத்துக்குள்ளான Mi 17 V5 ஹெலிகாப்டர் இவ்வளவு பாதுகாப்பை கொண்டதா? வியக்கவைக்கும் தகவல்கள்
    Published by:Musthak
    First published:

    Tags: Air force, Indian army

    அடுத்த செய்தி