Home /News /national /

6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய பிபின் ராவத்

6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய பிபின் ராவத்

சுமார் 20 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்தபோது, அதன் எஞ்சின் ஸ்தம்பித்து விபத்துக்குள்ளானது.

சுமார் 20 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்தபோது, அதன் எஞ்சின் ஸ்தம்பித்து விபத்துக்குள்ளானது.

சுமார் 20 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்தபோது, அதன் எஞ்சின் ஸ்தம்பித்து விபத்துக்குள்ளானது.

    6 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அன்றைக்கு ராணுவ துணை தளபதியாக இருந்த பிபின் ராவத் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த சம்பவம் இன்று பலரால் நினைவுகூரப்பட்டு வருகிறது.

    ராணுவத்தில், கடைநிலை ஊழியர்கள் முதல், உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது என்பதைத் தான் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம் உலகுக்கு உணர்த்தி உள்ளது.

    பாதுகாப்பு நிறைந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த போதிலும், எதிர்பாராதவிதமாக இன்று நடந்த விபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி மல்லிகா உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 14 பேரில் உயிர் பிழைத்த ஒரேயொரு அதிகாரி

    2015 பிப்ரவரி 3ஆம் தேதி - அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பிலிருந்தார். நாகலாந்தில் இருந்த அவர், 3 ராணுவ அதிகாரிகளுடன் ரப்கபாகர் விமானப்படை தளத்தில் இருந்து, சீட்டா ரக ஹெலிகாப்டரில் ஆய்வுப்பணிக்காக புறப்பட்டார்.

    சுமார் 20 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்தபோது, அதன் எஞ்சின் ஸ்தம்பித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத் உள்பட அனைவரும் வெளியே குதித்ததால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    Also Read : பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்...

    அன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய பிபின் ராவத் இன்று மனைவி மல்லிகாவுடன் வீர மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்
    Published by:Musthak
    First published:

    Tags: Indian army

    அடுத்த செய்தி