காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய 7 பேர் சுட்டுக்கொலை - சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு நீக்கப்படாது என்று ஆளுநர் உறுதி

"காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது"

Web Desk | news18
Updated: August 4, 2019, 6:43 AM IST
காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய 7 பேர் சுட்டுக்கொலை - சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு நீக்கப்படாது என்று ஆளுநர் உறுதி
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: August 4, 2019, 6:43 AM IST
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்று மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதிபடக் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காஷ்மீர் அனுப்பி வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் தீவிரவாதிகளின் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாத்திரை பாதியில் ரத்து செய்யப்பட்டது. யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும்படி மாநில நிர்வாகம் அறிவுறுத்தியது.


இதன்படி, ஸ்ரீநகரில் இருந்து 5 ஆயிரத்து 829 பயணிகள் 32 விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 383 பயணிகள் 4 இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பதான்கோட், ஹிண்டன் விமான நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்த சுற்றுலாப் பயணிகளில் 95 சதவீதம் பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை இயக்குநர் நஷீர் வானி கூறியுள்ளார்.

இதேபோல் மேச்சார் எனும் பகுதியில் உள்ள காளி கோவிலுக்கான யாத்திரையையும் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். தேசிய தொழில்நுட்ப நிறுவனம் என்ஐடிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், காஷ்மீரில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்களின் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமான கட்டணம் மூவாயிரம் ரூபாய் எனில் அந்த வழித்தடங்களின் தற்போதைய கட்டணம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Loading...

அனைவரும் பதட்டமாக உள்ளனர். என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.ஒரே குழப்பமாக உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து டெல்லி வருவதற்கு விமான கட்டணம் அதிகமாக உள்ளது. ஒரு நபருக்கு ரூ.12,000 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.

இதற்கிடையே, குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 36 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் ரோந்து பணி காரணமாக அந்த சடலங்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராணுவம் வெளியிட்ட புகைப்படம்


மேலும், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவினர் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதனை முறியடித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிப்பு மற்றும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் உறுதிபடக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு அரசுகள் அந்நாட்டு மக்களை காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன.

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...