• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காஷ்மீரில் தீவிரவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை மாணவர்களுக்கான நூலகமாக மாற்றிய ராணுவ வீரர்கள்!

காஷ்மீரில் தீவிரவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை மாணவர்களுக்கான நூலகமாக மாற்றிய ராணுவ வீரர்கள்!

நூலகம்

நூலகம்

பாழடைந்த நிலையில் இருந்த பேருந்து நிலையத்தை, மாணவர்களுக்கான தெருவோர நூலகமாக இந்திய ராணுவ வீரர்கள் மாற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயலால் பயனற்ற ஒரு இடம் இன்று மாணவ சமுதாயத்தினருக்கு அறிவுக் கோயிலாக மாறியிருக்கிறது.

  • Share this:
 

காஷ்மீரில் தீவிரவாதிகளின் நாச வேலை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதால் பாழடைந்த நிலையில் இருந்த பேருந்து நிலையத்தை, மாணவர்களுக்கான தெருவோர நூலகமாக இந்திய ராணுவ வீரர்கள் மாற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயலால் பயனற்ற ஒரு இடம் இன்று மாணவ சமுதாயத்தினருக்கு அறிவுக் கோயிலாக மாறியிருக்கிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள Devipora-Chittisingpora ஜங்ஷனில் பாழைந்த பேருந்து நிலையம் ஒன்று இருந்தது. 2016ம் ஆண்டு தீவிரவாதிகளின் நாச வேலை காரணமாக இந்த பேருந்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதன் பின்னர் பயபாட்டில் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் இந்திய ராணுவத்தின் 18 Rashtriya Rifles படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இணைந்து அந்த பேருந்து நிலையத்தை மாணவர்களுக்கான நூலகமாக மாற்றியுள்ளனர்.

ராணுவத்தினர் உருவாக்கிய இந்த நூலகம் தற்போது அருகாமையில் உள்ள Ranipura, Chittisigpura, Kejrival மற்றும் Devipora கிராமங்களில் வசிக்கும் மாணவர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை படித்து பயன்பெறுவதை பார்த்த ஆரம்ப மற்றும் தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கும் படித்து பயன் பெரும் வகையிலான புத்தகங்களை நூலகத்தில் வைக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து Lt Col Jha உடனடியாக சிறுவர்களுக்கான புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

காலையில் இந்த தெருவோர நூலகம் திறக்கப்பட்ட உடனே அங்கு அண்டை கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் மொய்த்து விடுகின்றனர். நூலகத்தில் மேலும் புத்தகங்களை கொண்டு வருவதற்காக ‘Books of India’ என்ற அமைப்புடன் இந்திய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கும், மேல்நிலை, கல்லூரி பயிலும் மாணவர்களும் இந்த நூலகத்தின் வாயிலாக பலனடைந்து வருவதாக கிராம மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒரு நூலகம் கொடுத்த ஊக்கத்தினால் மேலும் இது போல பல தெருவோர நூலகங்களை அமைக்க இந்திய ராணுவ வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். காஷ்மீரில் ராணுவ வீரர்களின் இந்த செயல் மாணவர்களின் பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: