ஹோம் /நியூஸ் /இந்தியா /

மெய் சிலிர்க்க வைத்த ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மரியாதை

மெய் சிலிர்க்க வைத்த ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மரியாதை

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

நாட்டின் 75வது ராணுவ தின விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் தளபதியாக கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்ட நாளை நினைவுகூறும் விதமாக ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி கரியப்பா மைதானத்தில் ராணுவ தின விழா நடைபெறும் இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் 8 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மிடுக்காக அணிவகுப்பு நடத்தினர்.

டிரோன்கள் மூலம் வானில் பறக்கவிடப்பட்ட மூவர்ணக் கொடி மற்றும் இந்திய ராணுவத்தின் கொடிக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

First published:

Tags: Army, Bengaluru, Indian army