காஷ்மீரில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - ஓடோடி சென்று உதவிய இந்திய ராணுவம்!

காஷ்மீரில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண் - ஓடோடி சென்று உதவிய இந்திய ராணுவம்!

படம்: நியூஸ் 18 பாதுகாப்பு அமைச்சகம்

முழங்கால் அளவு பனி சூழந்திருந்த அப்பகுதியில், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை, ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். 

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் பனிக்கட்டிகள் தேங்கிக்கிடக்கின்றன. இந்த நிலையில், ஜனவரி 5ம் தேதி குப்புவாரா மாவட்டம், கரலாபுரா (Karalpura) பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவர், பிரசவ வலியால் துடித்துள்ளார். பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல், அருகில் இருந்த சுகாதார நிலையத்தின் உதவியையும் பெற முடியாமல் அந்த பெண் அவதியடைந்துள்ளார். 

இதனால், அந்த பெண்ணின் கணவர் மன்சூர் அகமது ஷேக் (Manzoor Ahmed Sheikh), வேறுவழியின்றி ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட ராணுவத்தினரும், மருத்துவ நிபுணருடன் அந்த பெண் இருக்கும் வீட்டை அடைந்தனர். அப்போது, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை இருந்ததால், அந்த பெண்ணை தோளில் சுமக்கும் ஸ்டக்சரில் (Stucture) வைத்து ராணு வீரர்கள் தூக்கிச் சென்றனர். 

முழங்கால் அளவு பனி சூழந்திருந்த அப்பகுதியில், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டிருந்ததால், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ராணுவ வீரர்கள் கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக சுமந்து செல்லும் வீடியோவை பாதுகாப்பு துறை அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.Also read... 3 ஆண்டுகளுக்கு பிறகு பென்ஸ் நிறுவனத்தை பழித்தீர்த்த முன்னாள் ஊழியர் - ரூ.44 கோடி இழப்பு!

இதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் பாரமுல்லா மாவட்டத்தில் பனிப்பொழிவால் மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண் ஒருவரை, பலகிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று ராணுவத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இடுப்படுளவு பனிக்கட்டிக்கு இடையே சவாலான பாதையில் பெண்ணை ராணுவத்தினர் சுமந்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை, சரியான நேரத்தில் ராணுவத்தினர் சிகிச்சைபெற உதவினர். பின்னர், அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறந்தது.  

இதேபோல் , கடந்த செவ்வாய்க்கிழமை தார்டு போரா (Dard Pora) கிராமத்தில் இதேபோன்ற பிரச்சனையால் இருந்த பெண்ணுக்கும் ராணுவத்தினர் சென்று மருத்துவ உதவிகளை கொடுத்து காப்பாற்றியுள்ளனர். இதனிடையே, காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வீடுகள் முழுவதும் பனிக்கூடாரமாக காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. 100க்கும் மேற்பட்ட மக்களை சுமந்து செல்லும் ஸ்டக்சர்ஸ் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக சி.ஆர்.பி.எப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: