முழங்கால் ஆழமான பனியில் 2 கி.மீ தூரத்திற்கு கர்ப்பிணியை தோளில் தூக்கிச் சுமந்த ராணுவ வீரர்கள்... இணையத்தில் குவியும் பாராட்டு

முழங்கால் ஆழமான பனியில் 2 கி.மீ தூரத்திற்கு கர்ப்பிணியை தோளில் தூக்கிச் சுமந்த ராணுவ வீரர்கள்... இணையத்தில் குவியும் பாராட்டு

கர்ப்பிணியை தோளில் தூக்கிச் சுமந்த ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணை முழங்கால் ஆழமான பனியில் 2 கி.மீ தூரத்திற்கு தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த ராணுவ வீரர்களின் செயல் பலரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

  • Share this:
காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து முடங்கியதால் சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். காஷ்மீர் மற்றும் ஸ்ரீகரில் கடந்த சில நாட்களாக மோசமான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் சில விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சாலைகளையும் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் ஹோட்டல்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இலவச தங்கும் விடுதிகளை ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே பனிப்படலங்களில் விளையாடி, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பனியால் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மருத்துவ வசதிக்கு கூட வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரசவத்திற்காக ராணுவ வீரர்கள் 2 கி.மீ தூரம் வரை சுமந்து சென்றுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பார்கியன் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது ஷேக் என்பவர், பிரவத்திற்காக மருத்துவமனை செல்லவேண்டும். நகர் முழுவதும் பனி சூழ்ந்துள்ளதால் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக ராணுவத்திடம் தெரிவித்துள்ளார். அவரின் நிலைமையை புரிந்து கொண்ட இராணுவ வீரர்கள் மருத்துவ ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 

  

முழங்கால் ஆழமான பனியில் 2 கி.மீ தூரத்திற்கு அவர்கள் கர்பிணிப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றனர். பின்னர் கர்பிணிப் பெண் கரல்பூரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது நிலைமை குறித்து ஊழியர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் கர்பிணி பெண்ணுக்கு உதவிய இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: