Home /News /national /

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாக். வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாக். வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்!

கோப்புப்படம் (Getty Images)

கோப்புப்படம் (Getty Images)

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் இன்று நடத்திய பீரங்கி தாக்குதலில், 4- 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் பீரங்கிகளை கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 - 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு சண்டை நடந்து வருகிறது.

Published by:Sankar
First published:

Tags: Indian army, Jammu and Kashmir

அடுத்த செய்தி