நீங்கள் இந்தியாவுக்கு பிரதமரா...? பாகிஸ்தானுக்கு தூதரா...? மோடிக்கு மம்தா கேள்வி

நீங்கள் இந்தியாவுக்கு பிரதமரா...? பாகிஸ்தானுக்கு தூதரா...? மோடிக்கு மம்தா கேள்வி
மம்தா பேனர்ஜி
  • News18
  • Last Updated: January 4, 2020, 12:06 PM IST
  • Share this:
சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவுடன், பாகிஸ்தானை எதற்காக ஒப்பிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கம் மாநிலம் சிலுகுரியில் நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், பிரதமர் மோடி எதற்கெடுத்தாலும், இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுவதாக விமர்சித்தார். மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவை, எதற்காக பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டும் என்றும், மோடி இந்தியாவுக்கு பிரதமரா அல்லது பாகிஸ்தானின் தூதரா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மோடி நாட்டின் வளர்ச்சி பற்றி பேசாமல், பாகிஸ்தானை பற்றி பேசியே மக்களை குழப்புவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.

Also see...
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்