முகப்பு /செய்தி /இந்தியா / வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...

வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...

வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...

வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...

முறையான முகவர்கள் மூலம் வெளிநாடு செல்வோர் வேலைக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ஆணையரகம் சில தகவல்களை வழங்கியுள்ளது.

  • Last Updated :

வீட்டு வேலை, ஓட்டுநர் வேலை, என பல்வேறு வேலைக்காக வெளிநாடு செல்வோர் பலர் முறையான ஆவணங்கள் இல்லாததாலும் சரியான முகவர்கள் மூலம் வேலையில் சேராததால் பணிபுரியும் இடங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தவிர்க்க தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ஆணையரகம் உதவுகிறது. வெளிநாட்டுக்கு வேலை செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எனவே வேலை வாங்கி தருவதாக கூறிக் கொண்டு வரும் நபர்கள் Protector of Emigrants என்ற சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்த நபரா என தெரிந்து கொள்வது அவசியம்.

அதன் பிறகு வெளிநாடு தமிழர்களுக்கான ஆணையரகத்தில் பயிற்சி வழங்கப்படும். வீட்டு வேலை, ஓட்டுநர் வேலை போன்ற வேலைகளுக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் சவுதி அரேபியா, யுஏஇ போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றனர். எனவே அங்கு செல்லும் முன் அவர்களுக்கு பணி இடத்தில் தேவைப்படும் அடிப்படை அரபி சொற்கள் கற்று தரப்படும். வேலைக்கு செல்லும் நாட்டின் கலாச்சாரம், சட்ட திட்டங்கள் குறித்தும் சொல்லித்தரப்படும்.

Also read: போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வெளிநாடு செல்வோர் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். எனவே தூதரகத்தின் முகவரி மற்றும் தொடர்பு எண் தெரிந்து கொள்வது அவசியம். வேலைக்கான ஒப்பந்த ஆவணத்தையும் அதன் நகலையும் எப்போதும் கையில் வைத்திருப்பது அவசியம். அதில் தான் பணி செய்பவரின் உரிமைகள், பொறுப்புகள், ஊதியம், வேலையின் தன்மை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

வேலைக்கான விசா பெற்ற பிறகே வெளிநாடு செல்ல வேண்டும். அனைத்து ஆவணங்களின் நகல்களையும் குடும்பத்தினரிடமும் தன் வசமும் கூடுதலாக வைத்திருக்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆணையரகம் வலியுறுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    பணிபுரியும் இடங்களிலிருந்து (exit visa)  வெளிச்செல் விசா பெறாமல் நாடு திரும்ப முடியாது. உள்ளூர் அலுவலர்களின் அனுமதியின்றி வேறு நிறுவனத்திலோ, முகவரிடமோ பணிக்கு செல்லக் கூடாது. வாய்மொழியான எந்த உத்தரவாதத்தையும் நம்பாமல் முறையான ஆவணங்களை கேட்டுப் பெற வேண்டும் என ஆணையரகம் வலியுறுத்துகிறது.

    First published:

    Tags: Abroad jobs, Jobs