ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆபாச படம் எடுத்து 18 எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் : ரூ.30 கோடிவரை மோசடி செய்த ஒடிசா அழகி கைது!

ஆபாச படம் எடுத்து 18 எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் : ரூ.30 கோடிவரை மோசடி செய்த ஒடிசா அழகி கைது!

கைதான அர்ச்சனா நாக்

கைதான அர்ச்சனா நாக்

பணம் படைத்தவர்களை பிளாக்மெயில் செய்து அதன் மூலம் நான்கே ஆண்டுகளில் ரூ.30 கோடி பணம் குவித்த 26 வயது பெண் ஒடிசாவில் கைதானார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அர்ச்சனா நாக். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா நாக், 2015ஆம் ஆண்டில் புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்து தனியார் நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த அர்ச்சனாவுக்கு 2018ஆம் ஆண்டில் ஜெகபந்து என்ற நபர் அறிமுகமானார். இருவரும் நன்கு பேசிப் பழகிவந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துள்ளனர். ஜெகபந்து பழைய கார்களை விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக அர்ச்சனா ஜெகபந்து தம்பதியினர் திட்டம் தீட்டினர்.

அழகு நிலையத்தில் வேலை பார்த்த காலத்திலேயே அர்ச்சனா விபச்சார விடுதி நடத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகக் கூறப்படுகிறது. ஜெகபந்துவுக்கு பழக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செய்து, அவர்கள் அந்தரங்க செயல்களை அர்ச்சனா புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர் அந்த நபர்களிடம் தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர் அர்ச்சனா மற்றும் ஜெகபந்து தம்பதி. இவ்வாறு 18 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பறித்து நான்கே ஆண்டுகளில் ரூ.30 கோடி அர்ச்சனா குவித்துள்ளார். சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு அர்ச்சனா மிரட்டியுள்ள நிலையில், அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த பாலியல் தொல்லை, தங்க கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு? புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதை

அப்போது தான் இந்த பகீர் மோசடிகள் அம்பலமானது. புவனேஸ்வரில் உள்ள அர்ச்சனா மற்றும் அவரது கணவர் ஜெகபந்துவை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.26 வயது இளம்பெண் இத்தகைய பெரும் சதித்திட்டத்தை நடத்தியது ஒடிசாவை மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

First published:

Tags: Cheating case, Crime News, Cyber crime, Cyber fraud, Odisha