ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிந்து சமவெளி நாகரிக மக்கள் பன்றி, மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டுள்ளனர் - தொல்லியல் ஆய்வில் தகவல்!

சிந்து சமவெளி நாகரிக மக்கள் பன்றி, மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டுள்ளனர் - தொல்லியல் ஆய்வில் தகவல்!

தொல்லியல் ஆய்வு

தொல்லியல் ஆய்வு

பன்றி மாடு வெள்ளாடு செம்மறியாடு ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் பன்றி, மாட்டின் இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டு உள்ளனர் என்று தொல்லியல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் உணவு பழக்கம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அக்ஷிதா சூரியநாராயணன் தலைமையிலான குழுவினர் அண்மையில் சிந்து சமவெளி கால ஹரப்பர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் இன்றைய ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசம் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 172 மண்பாண்ட பொருட்களை ஆய்வு செய்தனர்.

Also read... வேளாண் சட்ட திருத்தங்கள் குறித்து விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்கியது மத்திய அரசு!

இந்த ஆய்வில், பன்றி மாடு வெள்ளாடு செம்மறியாடு ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் இருந்தது  தெரியவந்துள்ளது. இப்பகுதியில் கிடைத்த எலும்புகளில் 50% முதல் 60% எலும்புகள் மாடுகளினுடையாதாக இருப்பதால், அக்கால மனிதர்கள் அதிகளவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த ஆய்வின் முடிவுகள், Journal of Archaeological Science’.ல் வெளியாகியுள்ளது. மேலும், இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பாண்டங்களில் பால் பொருட்களின் எச்சங்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Archaeology