ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி!

ஆஸ்திரேயாவின் மெல்போனிலுள்ள மோனாஸ் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ள அப்சரா, அதன்பிறகு, பி.பி.சி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 9, 2019, 10:30 AM IST
ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி!
ராகுல் காந்தியுடன் அப்சரா ரெட்டி
Web Desk | news18
Updated: January 9, 2019, 10:30 AM IST
காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமணம் செய்யப்பட்டுள்ளார். திருநங்கை ஒருவர் தேசிய கட்சியில் உயர் பொறுப்பை பெறுவது இதுவே முதல்முறை.

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அப்சரா ரெட்டி, சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். திருநங்கைப் பெண்ணான அவர், ஆஸ்திரேயாவின் மெல்போனிலுள்ள மோனாஸ் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார். அதன்பிறகு, பி.பி.சி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான அப்சரா, அ.தி.மு.கவில் இணைந்து பணியாற்றிவந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா ஆதரவு அணியில் செயல்பட்டு வந்தார்.

Loading...
இந்தநிலையில், நேற்று அப்சரா, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் இணைந்தார். அவருக்கு பெண்கள் காங்கிரஸ் அமைப்பான மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அப்சரா, “இந்தியாவின் பழமையான மிகப்பெரிய கட்சியில் என்னை சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...