பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்திற்கு 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில், ஆண்டுக்கு 2.4 கோடி டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மீத தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் 7,300 கோடி ரூபாய் மதிப்பில் 1.5 கோடி டன் சமையல் எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
அதன்படி, இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து பாமாயிலும், பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும், ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்திலையில், மொத்த இறக்குமதியில் பாமாயிலின் அளவு 55 சதவீதமாக இருக்கிறது. இதையடுத்து உள்நாட்டிலேயே பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து, பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.
Must Read : பேங்க் லாக்கருக்கு புதிய விதிகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மாதிரிப்படம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்திற்கு 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் பாமாயிலின் உள்நாட்டு உற்பத்தியை, 2025 - 2026க்குள், 11 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.