வெள்ளைக்கொடியுடன் வந்து சடலங்களை எடுத்துச் செல்லுங்கள் - பாக். ராணுவத்துக்கு இந்தியா அழைப்பு

news18
Updated: August 4, 2019, 9:55 AM IST
வெள்ளைக்கொடியுடன் வந்து சடலங்களை எடுத்துச் செல்லுங்கள் - பாக். ராணுவத்துக்கு இந்தியா அழைப்பு
பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு பணியில் இந்திய வீரர்கள் (Reuters)
news18
Updated: August 4, 2019, 9:55 AM IST
காஷ்மீரில் நேற்று இந்திய படைகளால் கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சில நாட்களாக அதிகளவில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையால் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் திரும்பி அழைக்கப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 36 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் ரோந்து பணி காரணமாக அந்த சடலங்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையை (BAT - Border Action Team) சேர்ந்தவர்கள் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இந்த படையில் தீவிரவாதிகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...