இந்தியாவை பாராட்டிய தலிபான்கள்!

talibans

ஆப்கானிஸ்தானில் இந்திய அரசால் இரு நாட்டு நட்பு அடிப்படையில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சல்மா அணை கட்டித்தரப்பட்டது.

  • Share this:
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவியதற்காக இந்திய அரசுக்கு தலிபான்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலிபான் செய்தித்தொடர்பாளர் முகமது சுகைல் ஷாஹீன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அப்போது ஆப்கன் மக்களுக்கும், நாட்டின் நலத்திட்டங்களுக்காகவும் இந்தியா உதவி வந்திருக்கிறது.

ஆப்கன் மக்களின் நலனுக்காக அணைகள் கட்டித்தந்ததாகட்டும், தேசிய மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, புனரமைப்பு மற்றும் பொருளாதார செழிப்பு போன்ற இந்தியாவின் உதவி எதுவாகினும் அதனை நாங்கள் பாராட்டுகிறோம் என கூறினார்.

Also Read: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பியோட்டம்! – தலிபான் ஆட்சியை பிடிக்கிறது!

மேலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை எனவும் அதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் தெரிவித்தார். எந்த நாட்டின் தூதரகங்களை நாங்கள் தாக்க மாட்டோம் எனவும் தூதரக அதிகாரிகளுக்கு எங்களால் ஆபத்தில்லை எனவும் அவர் உறுதியளித்தார்.

ஆப்கானிஸ்தானில் இந்திய அரசால் இரு நாட்டு நட்பு அடிப்படையில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சல்மா அணை கட்டித்தரப்பட்டது. ஹீரத் மாகாணத்தில் ஹரி ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த அணையை 2016ம் ஆண்டு பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியும் இணைந்து திறந்து வைத்தனர். குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம் சேதமடைந்திருந்தது. அதனை கடந்த 2015ஆம் ஆண்டு சீரமைத்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Also Read: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் – முழு விவரம்!

இது போல ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அந்நாட்டின் மக்களுக்காகவும் பல கோடி ரூபாயை செலவிட்டுள்ளது இந்தியா. இதனிடையே கடந்த சில நாட்களில் இந்தியா கட்டிக்கொடுத்த 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலை ஆப்கன் அரசுப் படைகள் முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய அதிபர்:

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆப்கன் அதிபர் யார்?

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து இடைக்கால அதிபாராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. ஜலாலி காபுலில் பிறந்தவர் என்றாலும் 1987 வரை அமெரிக்க குடிமகனாக இருந்தவர். இவர் அமெரிக்காவின் மேரிலேண்டில் வசித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கானிஸ்தான் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், குழப்பத்தை போக்கும் வகையில் தலிபான்கள் சிலர் காவல் அவுட்போஸ்ட்களில் அமர்த்தப்படுவர் என தலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

 
Published by:Arun
First published: