“இருகரம் கூப்பி... 100 முறை மன்னிப்பு கேட்க தயார்...” உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி

“இருகரம் கூப்பி... 100 முறை மன்னிப்பு கேட்க தயார்...” உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி
நீதிபதி அருண் மிஸ்ரா
  • News18
  • Last Updated: December 5, 2019, 2:56 PM IST
  • Share this:
வழக்கு விசாரணை ஒன்றில் மூத்த வழக்கறிஞர் உடன் வாக்குவாதம் ஏற்பட்டு அவருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி அருண் மிஸ்ரா, பின்னர் எனது நடத்தையால் யாரும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள அருண் மிஸ்ரா, இரு தினங்களுக்கு முன்னர் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். அப்போது, வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனுக்கும், நீதிபதிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, பின்னர் அது வாக்குவாதமாக மாறியது. அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்ததார், மேலும் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து, வழக்கறிஞர் சங்கரநாராயணன் நீதிமன்ற அறையை விட்டு உடனே வெளியேறினார். இதன் பின்னர், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராகேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து வழக்கறிஞர்கள் சங்கத்தில் சார்பில், நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.


கடிதத்தில், பல வழக்கறிஞர்கள் நீதிபதி மீது புகார் அளித்துள்ளனர் எனவும், நீதிபதிகள் வழக்கறிஞர்களுடன் பொறுமையான போக்கை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், நீதிமன்றத்தின் கௌரவத்தையும், நம்பிக்கையையும் நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நீதிபதி அருண் மிஸ்ரா, ”எனது செய்கையால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். நான் அகங்காரத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. எனது நடத்தையால் வேதனையடைந்த ஒவ்வொரு வழக்கறிஞரிடமும் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். எனவே, யாரும் என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் பார் கவுன்சிலை எதை விடவும் அதிகமாக மரியாதை அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்