Home /News /national /

மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்கு! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்கு! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    மசூதிகளில் பெண்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மசூதிகளுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையால் பெண்களின் சமஉரிமையும், கண்ணியமும் கேள்விக்குள்ளாவதாக’ குறிப்பிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘அரசியலமைப்பு சட்டம் 14-வது பிரிவின்படி ஒரு நாட்டிடம் கோர வேண்டிய உரிமையை தனிநபர்கள் (மசூதி நிர்வாகம்) மீது திணிக்க முடியுமா? வேறு எந்த நாட்டிலாவது இஸ்லாமிய பெண்கள் மசூதிகளுக்குள் தொழுகை நடத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் கனடா நாட்டில் உள்ள பல மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு என தெரிவித்தார்.

    இதனையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கைத் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு? என்ன என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Mosque, Supreme court

    அடுத்த செய்தி