• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

  • Share this:
    முன்ஜாமின் வழங்கும்போது காலக்கெடு நிர்ணயிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 438-ன் படி முன் ஜாமின் பெறுவது தொடர்பாக சுஷிலா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததால், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், முன் ஜாமின் வழங்கும்போது குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க தேவையில்லை என்று உத்தரவிட்டது. ஒரு வழக்கில் விசாரணை நிறைவடையும் வரை முன் ஜாமின் வழங்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் வழக்கின் தீவிரத்தை பொறுத்து முன் ஜாமினுக்கான காலக்கெடுவை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது சரியாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: