ஆந்திராவில் இன்று முதல் காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு!

ஆந்திரா காவல்துறை - கோப்புப் படம்

காவல்துறை உயர் அதிகாரிகள் வாராந்திர விடுமுறை அளிப்பதன் மூலம், வேலை அழுத்தம் குறைக்கப்படும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் பணிக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர காவல்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார விடுமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, காவல்துறைக்கு வார விடுமுறை சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள், முதல்வர் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

ஜெகன்மோகன் ரெட்டி


அதன்படி, கான்ஸ்டபிள் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் ஒரு நாள் வார விடுமுறை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, காவல்துறையில் வாராந்திர விடுமுறை என்பதே இல்லை. அவர்கள் ஆண்டு விடுமுறையாக மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் கேஷ்வல் லீவ் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார், “காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ள அனைத்து போ​லீசாருக்கும் வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வாராந்திர விடுமுறையால், காவல்துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும். விடுமுறை நாட்களில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாராந்திர விடுமுறை அளிப்பதன் மூலம், வேலை அழுத்தம் குறையும். அவர்கள் உற்சாகத்துடன் பணிக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று அவர் கூறினார்.

Also see... சஞ்சய் தத் விடுதலையானது எப்படி?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: