பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக டிஎஸ்பி மீது புகார்!

தனலட்சுமி, டிஎஸ்பி துர்காபிரசாத்

தனலட்சுமி குடும்பத்தின் பொருளாதார நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிஎஸ்பி, கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக டி.எஸ்.பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பதியில் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக போலீஸ் டி.எஸ்.பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரியை சேர்ந்த பிரசாத்- தனலட்சுமி தம்பதி தனது மூன்று குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை தேடி ஹைதராபாத் சென்றுள்ளனர். அப்போது பிரசாத்தின் மனைவி தனலட்சுமியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி துர்கா பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனலட்சுமி குடும்பத்தின் பொருளாதார நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிஎஸ்பி, கணவர் பிரசாத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதை தனலட்சுமி நம்பியதை தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். அது நாளடைவில், இருவரும் தனிமையில் இருக்கும் அளவிற்கு சென்றாக கூறப்படுகிறது. இந்நிலையில் துர்காபிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படை போலீசுக்கு மாறுதலாகி சென்றார்.

இதை தொடர்ந்து பிரசாத் - தனலெட்சுமி குடும்பத்தை திருப்பதியில் குடியமர்த்தியுள்ளார் டிஎஸ்பி துர்கா பிரசாத். அவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனலட்சுமியும், டிஎஸ்பி துர்காபிரசாத்தும் அடிக்கடி தனிமையில் இருப்பதை கணவர் பிரசாத் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க பிரசாத் திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தனலட்சுமிக்கு போன் செய்த டிஎஸ்பி. திருப்பதியில் உள்ள வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரசாத், இருவரையும் கையுளம் களமாக பிடிக்க காத்திருந்தார்.

டிஎஸ்பி துர்கா பிரசாத் வீட்டிற்கு வந்து மனைவி தனலட்சுமியுடன் தனிமையில் இருந்த போது, திருச்சானூர் போலீசாருடன் பிரசாத் வீட்டிற்கு சென்றார். போலீசார் வருவதை அறிந்து கொண்ட டிஎஸ்பி துர்காபிரசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதை தொடர்ந்து, தனலட்சுமியை அழைத்து வந்து திருச்சானூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவான டிஎஸ்பி துர்கா பிரசாத் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: