திருவள்ளூரில் கோடிக்கணக்கான பணத்துடன் பிடிப்பட்ட கார் விவகாரம்: விளக்கமளித்த ஆந்திர அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய காருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் பலினேனி விளக்கம் அளித்துள்ளார். 

திருவள்ளூரில் கோடிக்கணக்கான பணத்துடன் பிடிப்பட்ட கார் விவகாரம்: விளக்கமளித்த ஆந்திர அமைச்சர்
MLA ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பணம் கடத்தல்
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையின்போது கோடிக்கணக்கான ரூபாய் கத்தைக் கத்தையாக சிக்கியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஸ்டிக்கர் ஒட்டியவாறு ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வந்த சொகுசுக்காரை, போலீசார் மடக்கி சோதனையிட்டபோது, அதிலிருந்து மூவர் தப்பி ஓட முயன்றிருக்கின்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வாகனத்தை முழுமையாக சோதனையிட்டிருக்கின்றனர். அதில் 4 பைகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்துள்ளது.

பின்னர் அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியில் ஆய்வாளர் வெங்டாச்சலம் தலைமையில் காவலர்கள் எளாவூர் அருகே ஏழு கிணறு சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்திய தமிழக காவலர்கள் சோதனை செய்தனர். வாகனத்தில் வந்தவர்கள் உரிய இ-பாஸ் இல்லாமல் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்


அவர்களுடைய காரில் சோதனை செய்தபோது, அதில், ஒரு பையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுடைய காரில் ஆந்திரப் பிரதேச எம்.எல்.ஏவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காரிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கார்


மேலும், அந்தப் பணமும் காரும் ஆந்திரப் பிரதேச அமைச்சருக்கு சொந்தமானது என்று செய்திகள் வெளியானது. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ஆந்திரப் பிரதேச அமைச்சர் பலினேனி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பான அவருடைய விளக்கத்தில், ‘கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் சென்னை சென்ற என்னுடைய பெயர் ஒட்டப்பட்டிருந்த கார் காவல்துறையில் சிக்கியது கவனத்துக்கு வந்தது. எனக்கு அந்த காருக்கும், அதில் பயணத்தவர்களுக்கும், அதில் இருந்த பணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கார். சில செய்திகளில் அந்தக் கார் என்னுடைய கார் என்று செய்திகள் வந்தன. சிலர், என்னுடைய ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை செய்யவேண்டிய தேவை ஊடகங்களுக்கு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading