ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலை தொடர மறுத்ததால் பெண்ணுக்கு கத்திக்குத்து

காதலை தொடர மறுத்ததால் பெண்ணுக்கு கத்திக்குத்து

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலம், ஏலூரில் காதலை தொடர மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.

  கிழக்கு கோதாவரி மாவட்டம், ஏலூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் பணிபுரிந்து வந்தார். அதே வணிக வளாகத்தில் காயத்ரி என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்தநிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி வேறு ஒரு வணிக வளாகத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது முதல் பிரதீப்புடன் பேசுவதை காயத்ரி நிறுத்திவிட்டார். தனது காதலை உதாசீனப்படுத்தியதற்காக  ஆத்திரமடைந்த பிரதீப் இன்று மதியம் காயத்ரி பணிபுரியும் வணிக வளாகம் அருகே சென்று அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளார்.

  இதன்படி, காயத்ரியை வெளியே வந்தபோது பிரதீப் அவருடன் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவேசம் அடைந்த பிரதீப் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காயத்திரியின் கழுத்து உள்ளிட்ட 3 இடங்களில் குத்தினார். படுகாயம் அடைந்த காயத்திரியை அங்கிருந்தவர்கள் ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பொதுமக்கள் பிரதீப்பை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Andhra Pradesh