அமராவதியில் 108 அடி உயர என்.டி.ராமாராவ் சிலை: ஆந்திர அரசு முடிவு

என்.டி.ராமாராவ்

இந்த சிலைக்கு ‘தெலுங்கு மக்களின் சுய கவுரவ முன்மாதிரி’ என்று பெயர் சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு அமராவதியில் 108 அடி உயர சிலை அமைப்பது என அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  சுதந்திரத்திற்கு பின் நாட்டை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்திய சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநில அரசு 2,989 கோடி ரூபாய் செலவில் 597 உயர சிலையை நிறுவியது. சர்வதேச அளவில் மிகவும் உயரமான சிலை என்ற பெயரையும் குஜராத்தில் உள்ள படேல் சிலை பெற்றுள்ளது.

  இந்நிலையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள நீருகொண்டா மலை மீது 108 அடி உயரம் கொண்ட என்.டி.ராமாராவ் சிலையை நிறுவ ஆந்திர அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.

  இதுதொடர்பாக, ஆந்திர அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிலை தொடர்பாக 6 மாதிரி வரைபடங்களை பரிசீலித்த அமராவதி அபிவிருத்தி கழக அதிகாரிகள் அவற்றை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் காண்பித்து, அவற்றில் 108 அடி உயரம் கொண்ட சிலையின் மாதிரிக்கு ஒப்புதலை பெற்றுள்ளனர்.

  இந்த சிலை 406 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில் 155 கோடி ரூபாயை பயன்படுத்தி 200 ஏக்கர் பரப்பளவு பகுதியில் உணவு விடுதிகள், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம், ஷாப்பிங் பகுதி, அருங்காட்சியகம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த சிலைக்கு ‘தெலுங்கு மக்களின் சுய கவுரவ முன்மாதிரி’ என்று பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகள் 46 மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: