ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவல்!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவல்!
சந்திரபாபு நாயுடு.
  • News18
  • Last Updated: September 11, 2019, 9:24 AM IST
  • Share this:
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அம்மாநில எதிர்க்கட்சியான தெலுங்கு சேதம் கட்சி பேரணிக்கு அழைப்பு விடுத்தது. அக்கட்சி தலைவர் சந்திரபாபு, 12 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், சந்திரபாபு, அவரது மகன் நாரா லோகேஷ் அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும், போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற தொண்டர்களை கைது செய்தனர். மேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்