• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கருப்புச் சட்டை அணிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! காரணம் இதுதான்

கருப்புச் சட்டை அணிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! காரணம் இதுதான்

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

மோடிக்கு எதிராகவும், பா.ஜ.கவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனை முன்வைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் அலுவலகத்துக்குச் சென்றார்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.  அதனையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார்.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாத நிலையில், பா.ஜ.க கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். மேலும், மோடிக்கு எதிராகவும், பா.ஜ.கவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனை முன்வைத்தார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததுதான் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காரணம் என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில், பா.ஜ.க அரசின் இறுதி பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    முன்னதாக, பட்ஜெட் தாக்கலும் எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கருப்பு சட்டை அணிந்து, முதல்வர் அலுவலகத்துக்குச் சென்றார்.

    மேலும், அவர் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் கருப்புச் சட்டை அணிந்து வர வலியுறுத்தியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து வந்த அவர்களது ஆதரவை அளித்தனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: