இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்ல என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லீம் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பக்வத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “ நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இங்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் ஒருபோதும் இருக்க முடியாது. இந்தியாவில் இந்தியர்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க முடியும். தேசியவாதம் என்பது ஒற்றுமையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஒரு இந்து இந்த நாட்டில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக் கூறியானால் அந்த நபர் இந்துவே அல்ல. பசு புனிதமான விலங்கு என்றாலும் அதற்காக கும்பலாக தாக்குதலில் ஈடுபடும் இந்துக்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது எந்த பாகுபாடும் காட்டாமல் சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்திய மக்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் உள்ளது. இந்து- முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் எனப் பேசுபவர்களுக்கு ஒன்றை சொல்கிறோம். இங்கு நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நாங்கள் இங்கு பிரிந்து இருக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்சி அரசியலில் விருப்பம் இல்லை. நாடு தான் எங்களுக்கு முக்கியம். நாட்டுக்காக பேசுபவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu, Hindus and muslims, India, Mohan Bhagwat, Muslim, RSS, RSS meeting