முகப்பு /செய்தி /இந்தியா / யார் வேண்டுமானாலும் நெருங்கி செல்பி எடுக்கும் வகையில் தான் தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு இருக்கிறது - உளவுத்துறை

யார் வேண்டுமானாலும் நெருங்கி செல்பி எடுக்கும் வகையில் தான் தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு இருக்கிறது - உளவுத்துறை

ரஞ்சன் கோகாய்

ரஞ்சன் கோகாய்

  • Last Updated :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக, உள்துறை அமைச்சகத்துடன் உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், டெல்லியில் உளவுத்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று ஆலோசனை நடத்தினர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏ.என்.ஐ. நிறுவனம், ரஞ்சன் கோகாய்க்கு போதுமான பாதுகாப்பை டெல்லி காவல்துறை வழங்குவதில்லை என இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் யார் வேண்டுமானாலும் அவர் அருகே சென்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையில் தான் பாதுகாப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என டெல்லி போலீஸ் மற்றும் உளவுத்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

top videos
    First published:

    Tags: CJI, Justice Ranjan Gogai