Home /News /national /

எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன.. பிரதமர் மோடி பெருமிதம்

எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன.. பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi

PM Modi

நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் இளைஞர்கள் கொண்டு செல்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

  இந்த முறை பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுதித விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தேசிய பால புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமரின் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதில், பிரதமர் மோடி கூறியதாவது:

  சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம், சமயத்திற்கு அவர்களின் தியாகம் ஒப்பில்லாதது.

  Also read: பாஜகவுடன் நண்பர்களாக இருந்தோம் என்பதை நினைக்கும் போது.. வருத்தப்பட்ட சிவசேனா.. பதிலடி கொடுத்த பாஜக!!

  டெல்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்.

  எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன. தொடங்குக இந்தியா, நிமிர்ந்து நில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுடன் தற்சார்பு இந்தியாவின் மக்கள் இயக்கம் நவீன கட்டமைப்புகள் உருவாக்கம் போன்ற முன்முயற்சிகள் இதற்கு எடுத்துக்காட்டு.

  Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

  இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருகிறது. இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

  நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும் என்று அவர் கூறினார்.

  Also read:  சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
  Published by:Esakki Raja
  First published:

  Tags: PM Modi

  அடுத்த செய்தி