ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியா மீது தீய பார்வை செலுத்துபவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும் - பாதுகாப்பு அமைச்சர் உறுதி

இந்தியா மீது தீய பார்வை செலுத்துபவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும் - பாதுகாப்பு அமைச்சர் உறுதி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

தேச நலன்களைப் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Haryana, India

  இந்தியாவின் மீது தீய பார்வையை செலுத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவம் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். மன்னர் பிரித்விராஜ் சவுகானின் சிலையை திறந்து வைத்த ராஜ்நாத் சிங் தேச பாதுகாப்பு நாட்டின் ராணுவ பலம் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் தனது உரையில் கூறியதாது, "தேச நலன்களைப் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உபகரணங்களுடனும் தயாராக உள்ளோம்.

  இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். 2016இல் துல்லியத் தாக்குதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின் போது நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார்நிலைக்கு சான்றாகும்.

  காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட, ராஜ்பாத்தின் பெயரை கடமைப் பாதை என்று மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்தியா கேட் வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவியுள்ளது. அதேபோல் காலாவதியான சுமார் 1,500 பிரிட்டிஷ் காலச் சட்டங்களை நீக்கியுள்ளது. இவ்வாறு பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

  இதையும் படிங்க: வாழும் தேவதை.. உடல் உறுப்பு தானத்தால் இருவருக்கு வாழ்வு கொடுத்த 18 மாத குழந்தை!

  அரசின் முயற்சிகளால் இந்தியா இப்போது உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது, விரைவில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. " இவ்வாறு அவர் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Haryana, Indian army, Rajnath singh