Home /News /national /

மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகிறார்கள் - சோனியா காந்தி காட்டம்..

மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகிறார்கள் - சோனியா காந்தி காட்டம்..

சோனியா காந்தி

சோனியா காந்தி

தேசவிரோத சக்திகள் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டீஸ்கர் மாநில புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு வீடியோ செய்தி ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ”இன்று இந்நாடு முச்சந்தியில் நிற்கிறது. ஏழைகளுக்கும் தேசத்துக்கும் விரோதமான சக்திகள், மக்களிடையே மோதலை ஏற்படுத்தி ஆள்பவர்கள், வெறுப்பையும் வன்முறையையும் ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

    Also read: பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்

    மேலும் கூறுகையில், பழங்குடிகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், குறுந்தொழில் செய்பவர்கள் பேசக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்; நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள் என்றார்.



    சில சக்திகள் நாட்டை தடம்புரளச் செய்ய முயல்வதாகக் கூறிய அவர், ஜனநாயக நிறுவனங்கள் அழிக்கப்படுவதாகவும், கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும்போது இத்தகைய ஆபத்துகள் நேரும் என எண்ணியிருக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Democracy, Sonia Gandhi

    அடுத்த செய்தி