சொகுசு கப்பலில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதை பொருள் தடுப்பு பிரிவு விடுவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற கோர்டேலியா ஆடம்பர கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவருடன் 6 பேரும் பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் 4 வாரங்கள் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவ்வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரைத்தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இவ்வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு அதிகாரி சமீர் வாங்கடே விசாரித்தார். அப்போது சமீர் வாங்கடே மீது ஷாருக் கானை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், சாதிச் சான்றிதழை திருத்தி மோசடி செய்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து இவ்வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வாங்கடே விடுவிக்கப்பட்டார். டெல்லி சிறப்பு விசாரணைக்கு குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும் - காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல்
அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 14 பேர் மீது போதை பொருள் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே வழக்கு விசாரணையை சரியாக நடத்ததாத சிறப்பு அதிகாரி சமீர் வாங்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.