டி.ஆர்.டி.ஓவின் தயாரிப்பான கொரோனாவை குணப்படுத்தும் வாய் வழி உட்கொள்ளும் மருந்துக்கு அவசர கால அனுமதி!

கொரோனா எதிர்ப்பு மருந்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே 3 கட்டமாக பரிசோதனை செய்யப்பட்ட போது இந்த மருந்து நல்ல பலனை தந்ததாகவும், கொரோனா தொற்றிலிருந்து மீள உதவியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது

  • Share this:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனாவிற்கு எதிரான மருந்திற்கு அவசர கால அனுமதி கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. மே 1ம் தேதியில் இருந்து நாள் தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 4,000ஐ தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு நிரந்தர தீர்வாக சொல்லப்படுவது தடுப்பூசி மட்டுமே. தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்பட்னிக் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இருந்து ஸ்பட்னிக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) கொரோனாவிற்கு எதிரான மருந்து ஒன்றினை தயாரித்துள்ளது. வாய் வழியாக உட்கொள்ளும் பவுடர் வடிவிலான இந்த மருந்திற்கு அவசர கால அனுமதி கிடைத்துள்ளது.

பாக்கெட் அளவுகளில் கிடைக்கும் இந்த மருந்தை தண்ணீரில் கலந்து வாய் வழியாகவே குடிக்கலாம். இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இந்த மருந்துக்கு அவசர கால அனுமதியை வழங்கியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே 3 கட்டமாக பரிசோதனை செய்யப்பட்ட போது இந்த மருந்து நல்ல பலனை தந்ததாகவும், கொரோனா தொற்றிலிருந்து மீள உதவியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருத்து கொடுத்து சோதனை செய்யப்பட்ட பலரும் விரைவாக கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போடுவது என்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதும், தடுப்பூசி தட்டுப்பாடும், தடுப்பூசி போடும் பணிகளுக்கு மருத்துவர்கள்/செவிலியர்கள் அதிகம் தேவை என்பதும் தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூழலில் டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள இந்த வாய்வழி உட்கொள்ளும் கொரோனா எதிர்ப்பு மருந்து கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையில் இருந்து நாட்டு மக்களை விரைவாக காக்கும் என கூறப்படுகிறது.

 
Published by:Arun
First published: