டெல்லியில் யாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

உயர்அதிகாரிகள் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியதால், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

news18
Updated: February 14, 2019, 1:21 PM IST
டெல்லியில் யாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: February 14, 2019, 1:21 PM IST
டெல்லியில் ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணை ஆணையம் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், அரசு செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், சில உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.

அதில், மின்சாரத் துறை, வருவாய்த் துறை ஆகியவை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணை ஆணையம் உள்ளிட்ட 4 அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். அதேநேரம், உயர்அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு என்பதில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர்.

இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்தார். இதனை ஏற்க அசோக் பூஷண் மறுத்துவிட்டார்.

இதனால் இந்த விவகாரத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை அளித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு, ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

Also see...
Loading...
First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...